ETV Bharat / city

சென்னையில் ரூ.335 கோடியில் 3 புதிய மேம்பாலம் அமைக்கத் திட்டம்

சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்குப் புதியதாக மூன்று மேம்பாலங்களைக் கட்ட பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி அறிவிப்பு
author img

By

Published : Dec 13, 2021, 12:32 PM IST

சென்னை: தலைநகர் சென்னையில் 335 கோடி ரூபாய் செலவில் மூன்று புதிய மேம்பாலத்தைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

இதனைக் குறைப்பதற்கு மாநகராட்சி சார்பாகவும், பொதுப்பணித் துறை சார்பாகவும் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் கட்டி முடித்த வேளச்சேரி மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டன.

புதிய மூன்று மேம்பாலங்கள்

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஏற்கனவே கணேசபுரம், ஓட்டேரி, தியாகராய நகர் உஷ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்களைக் கட்ட திட்டமிட்டிருந்தது.

இதற்காக 335 கோடி ரூபாயை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி (Infrastructure and Amenities Fund) மூலம் பெற்று, புதிய மேம்பாலங்களைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கணேசபுரத்தில் 142 கோடி ரூபாயில் 680 மீ நீளம், 15.20 மீ அகலத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதேபோல், ஓட்டேரியில் (junction of Konnur High Road – Strahan's Road – Cooks Road – Bricklin Road) 62 கோடி ரூபாயில் 508 மீ நீளம், 8.4 மீ அகலத்திற்கு இரண்டு வழிச் சாலையாகவும், தியாகராய நகரில் (Flyover along South Usman Road and CIT Nagar 1st main road) 131 கோடி ரூபாயில் 1200 மீ நீளம், 8.4 மீ அகலத்திற்கு இரண்டு வழிச்சாலை அமைக்க மாநகராட்சித் திட்டமிட்டுள்ளது.

இதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய பிறகு ஒப்பந்தம் விடப்படும் என மாநகராட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெ. தீபா, ரஜினி குறித்து திருவாய் மலர்ந்த செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.