தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் மண்டலத்தில் 79ஆவது முதல் 91ஆவது வார்டு வரை தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாடு குறித்து சென்னை மாநகராட்சி அலுவலர்களால் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 27,146 வணிக நிறுவனங்கள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் செய்யப்பட்டதில், 6 லட்சத்து 35 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 27 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், அண்ணா நகரில் 35,260 வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோரக் கடைகளில் மேற்கொண்ட சோதனைகளில் 9 லட்சத்து ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 28 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 3,88,315 நிறுவனங்கள், கடைகளில் மேற்கொண்ட ஆய்வுகளில், சுமார் 312 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1,05,13,700 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எலியட்ஸ் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை