சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாகி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மே எட்டாம் தேதி முதல் நேற்று வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 1,00,352 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளது. அதில் 48,31,935 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனை செய்யப்பட்டதில் 2,13,485 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். அதிக பட்சமாக தேனாம்பேட்டையில் 10,674 மருத்துவ முகாம்களும், அடுத்ததாக அண்ணா நகரில் 9631 மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்கள் கரோனா கட்டுப்படுத்த பெருதும் உதவியாக இருந்து இருக்கிறது.
இதையும் படிங்க...சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - அதிமுக நிர்வாகி கடிதம்