ETV Bharat / city

தெரு நாய்கள் - தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்!

சென்னை: மாநகரப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது விபரங்களைப் பதிவு செய்ய மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

dogs
dogs
author img

By

Published : Jan 3, 2020, 5:24 PM IST

சென்னை மாநகரப் பகுதிகளில், கால்நடைகள் சுகாதாரப் பிரிவு சார்பாக தெரு நாய்களுக்கான இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் கடித் தடுப்புபூசிகள் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, இந்திய விலங்குகள் நல வாரியம் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இடையே புரிதலை உருவாக்கவும், தெரு நாய்களின் வாழ்வியல் முறையை மேம்படுத்தவும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பை நாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மேலும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை அடையாளம் காணவும், இனக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்திராத நாய்களைக் கண்டிடவும், தெரு நாய்களைத் தத்தெடுக்கும் திட்டத்தை ஊக்குவிப்பதற்கும், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளப்படுவர்.

எனவே, மாநகராட்சியால் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது விபரங்களை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.01.20

தெரு நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த திட்டம்; சென்னை மாநகர பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது விபரங்களை பதிவு செய்ய உத்தரவு...

சென்னை மாநகர பகுதிகளில் பொதுசுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் கால்நடைகள் சுகாதாரப் பிரிவில் தெரு நாய்களுக்கான இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறி நாய் கடி தடுப்பு ஊசிகள் தெரு நாய்களுக்கு செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தெரு நாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இடையிலான இந்த தீர்வு காணவும், இத்தகைய நாய்களின் வாழ்வியல் முறையை மேம்படுத்தவும், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின் படி மாநகராட்சி தன்னார்வலர்களின் ஒத்துழைப்பை நாட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் தோல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை அடையாளம் காணவும், இனக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்திராயல்த நாய்களை அடையாளம் காணவும், தெரு நாய்களை தத்தெடுக்கும் திட்டத்தை ஊக்குவிப்பதற்கும், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளப்படும். எனவே, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதல்படி மாநகராட்சியால் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது விபரங்களை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்..

tn_che_02_corporation_planned_to_stop_spreading_diseases_from_stray_dogs_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.