ETV Bharat / city

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி - கரோனா வைரஸ்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

author img

By

Published : Jul 4, 2022, 3:02 PM IST

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2 வாரங்களாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை துணிக்கடைகள் அனுமதிக்க வேண்டும்.

வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஒவ்வொரு தனிநபரும் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வெளியில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும், தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'அழகான பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்': திமுக எம்எல்ஏ-வை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.