ETV Bharat / city

வீட்டுக்கு வந்து தடுப்பூசி செலுத்தப்படும் - சென்னை மாநகராட்சி - முதியவர்களுக்கு வீட்டுக்கு வந்து தடுப்பூசி செலுத்தப்படும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மாநகராட்சியின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்தால், மாநகராட்சி மருத்துவர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து தடுப்பூசி செலுத்துவார்கள். 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீட்டுக்கு வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

senior citizen over the age of 60 will be vaccinated at home
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Jan 17, 2022, 4:41 PM IST

சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தப்பட்டு வருகிறதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோருக்கு, மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்கள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்த மாநகராட்சியின், 1913, 044-2538 4520, 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கு மாநகராட்சி மருத்துவப் பணியாளர்கள் நேரடியாக வந்து தடுப்பூசி செலுத்துவார்கள்.

மேலும், பயணிக்கக் கூடிய நிலையில் உள்ள விருப்பமுள்ள இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள கரோனா தடுப்பூசி மையங்களில் நேரில் சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose)யினை செலுத்திக் கொள்ளலாம்.

தடுப்பூசி மையங்களின் விவரங்களை, மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம். அவ்வாறு செல்லும் பொழுது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், மாநகராட்சி தடுப்பூசி முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை , ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கரோனா பொங்கல் விடுமுறைக்குப் பின் அதிகரிக்கும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.