சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் வேளச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாசன் மெளலானாவுக்கு சொந்தமான தனியார் விடுதியான ஆர்ச்சிர்ட் ரிசார்ட் அமைந்துள்ளது.
இந்தத் தனியார் விடுதியில் நேற்றிரவு முதல் விடிய விடிய விங்ஸ்(WINGS)என்ற நிறுவன ஓப்பந்ததின் அடிப்படையில் மேனஜர் சைமன் தலைமையில் இசை நிகழ்ச்சி மற்றும் மது விருந்து நடந்து வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரகசிய தகவலையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் விடுதிக்கு வந்த மது விலக்கு காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனை செய்ததில் பல கோடி மதிப்பிலான விலையுர்ந்த கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
50 பெண்கள் உள்பட 500 இளைஞர்கள்
இந்த தனியார் விடுதியில் நடைபெற்ற மது விருந்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாக தெரிய வந்தது. குறிப்பாக இந்த மது விருந்தில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் இசை நிகழ்ச்சி மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோரின் பெயர் மற்றும் முகவரிகளை போலீசார் வாங்கி வருகின்றனர்.
போலீசார் அறிவுரை
மேலும் மேனேஜர் சைமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் காவல் ஆணையர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பின் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மன அழுத்த குறைவு
இளைஞர்கள் தங்களின் மனஅழுத்த குறைவுக்கு நல்ல வழியை பயன்படுத்துங்கள். இங்குள்ள அனைவரையும் விடுவிக்கிறேன். இளைஞர்கள் வேகமாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க : 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு... அப்புறம் பெயிலு..'!