சென்னை: கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மின் திட்டம் சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டதால் சீனாவிலிருந்து தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு வர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம், கார்த்தி சிதம்பரத்தை அவரது கூட்டாளிகள் மூலம் அணுகியதாகக் சொல்லப்படுகிறது.
இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அலுவலர்களுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது - சிபிஐ அதிரடி