ETV Bharat / city

ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு அடித்த லக்கி; உழைப்பைப் பாராட்டி BMW காரை பரிசாக வழங்கிய ஐடி கம்பெனிகள்! - ஐடியா 2 ஐடி

அண்மைக்காலங்களாக சென்னையிலுள்ள ஐடி கம்பெனிகளான கிஸ்ஃப்ளோ இன்க் (Kissflow Inc) மற்றும் ஐடியா 2 ஐடி (Ideas2IT Technologies) ஆகியன அடுத்தடுத்து அதன் ஊழியர்களுக்கு BMW காரை பரிசாக வழங்கியுள்ளன.

BMW
BMW
author img

By

Published : Apr 12, 2022, 10:58 PM IST

சென்னை: கரோனா கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மேலும், பல்வேறு ஊழியர்கள் தங்களது வேலையை இழந்தனர். இந்த நிலையில், பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கடந்த ஒரு வாரமாக கார் பரிசு அளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

முதலில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு (ஏப்.10) சென்னை கந்தன்சாவடியிலுள்ள கிஸ்ஃப்ளோ இன்க் (Kissflow Inc) நிறுவனம் தங்களது நிறுவனத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரியும் 5 நபர்களை தேர்ந்தெடுத்து தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ (Bayerische Motoren Werke AG-BMW) காரை பரிசாக வழங்கி உள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுரேஷ், 'இந்த நிறுவனம் தொடங்கிய 10 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.

BMW கார் பரிசு
BMW கார் பரிசு

இந்த சமயத்தில் இந்த நிறுவனம் தொடங்கியது முதல் இது வரை இருக்கும் ஊழியர்களுக்கு 5 நபர்களுகளை கௌரவிக்கும் விதமாக பிஎம்டபிள்யூ (BMW) காரைப் பரிசாக வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க நேற்று (ஏப்.11) இதேபோல, 100 ஊழியர்களுக்கு 100 கார் பரிசு அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, மற்றொரு ஐடி நிறுவனம். ஐடியா 2 ஐடி (Ideas2IT Technologies) என்ற நிறுவனம் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கிண்டியில் இயங்கி வருகிறது.

'கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்கு 56% வருமானம் அதிகரித்துள்ளது. இதனால், தங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக 100 நபர்களுக்கு தலா ஒரு கார் வீதம் வழங்கி பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலேயே முதல் ஐடி நிறுவனம் நூறு ஊழியர்களுக்கு கார் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்வாறு அளிப்பது நிறுவனத்தை மேலும் உயர்த்தும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) காயத்ரி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Hand Free Mouseware: இனி கம்ப்யூட்டரில் வேலை செய்ய மவுஸ் தேவையில்லை - புதிய கருவியை உருவாக்கிய யூத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.