ETV Bharat / city

சென்னை விமான நிலைய சிஐஎஸ்எஃப் டிஐஜி-க்கு 'அதி உத்ரிஷ்த்' பதக்கம் - Chennai Airport CISF DIG SRIRAM

சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீ ராமிற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதி உத்ரிஷ்த் சேவை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீ ராம் Chennai Airport CISF DIG SRIRAM
மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீ ராம்
author img

By

Published : Jul 16, 2022, 10:43 AM IST

சென்னை: சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1995ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் அஸ்ஸாம், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்புபடைக்கு தலைமை வகித்தார். அதனை தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று, சென்னை விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஆக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பாதுகாப்பு பணியில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு உத்ரிஷ்த் மற்றும் அதி உத்ரிஷ்த் சேவை பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தற்போது, 2020ஆம் ஆண்டுக்கான உத்ரிஷ்த் சேவை பதக்கப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீராமின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீராம் இதற்கு முன், சிறப்பாக பணியாற்றியதற்காக 2017இல் குடியரசுத் தலைவர், போலீஸ் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.