சென்னை: புறநகர் ரயிலின் நேர மாற்றம் அல்லது நிறுத்தப்பட்ட சேவைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை புறநகர் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை நிறுத்தப்பட்ட சேவைகள்
- ரயில் எண் பிசி 23 - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 09:32 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் பிசி 25 - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 10:08 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் பி.சி 27 - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 10:56 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் பி.சி 29 - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 11:48 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் பிசி 31 - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து 2021 ஜனவரி 30ஆம் தேதி 12:15 மணிக்கு புறப்படும்.
செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை நிறுத்தப்பட்ட சேவைகள்
- ரயில் எண் சிபி 30 - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, 2021 ஜனவரி 30ஆம் தேதி 10:55 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும்.
- ரயில் எண் சிபி 32 - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, செங்கல்பட்டுவிலிருந்து புறப்பட்டு 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 11:30 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் சிபி 34 - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, செங்கல்பட்டுவிலிருந்து புறப்பட்டு 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 12:20 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் சிபி 36 - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 13:00 மணிக்கு புறப்படும்.
- ரயில் எண் சிபி 38 - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, செங்கல்பட்டிலிருந்து 2021 ஜனவரி 29 மற்றும் 30ஆம் தேதிகளில் 13:50 மணிக்கு புறப்படும்.
நேரமாற்றம் செய்யப்பட்ட ரயில் சேவை
- ரயில் எண் டிஎல்பி 4, திருமால்பூர் - சென்னை கடற்கரை, காலை 10:30 மணிக்கு திருமால்பூரில் இருந்து புறப்படும் நேரம் மாற்றப்பட்டு, 2021 ஜனவரி 29ஆம் தேதி 12:15 மணிக்கும், 2021 ஜனவரி 30ஆம் தேதி 12:00 மணிக்கும் திருமால்பூரில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.