ETV Bharat / city

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : Apr 11, 2022, 2:44 PM IST

சென்னை: வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.11) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்.11) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்.12) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்.13) ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழ்நாடு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏப்ரல் 14ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏப்ரல் 15ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மயிலாடி (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ, காயல்பட்டினம் (தூத்துக்குடி), எட்டயபுரம் (தூத்துக்குடி), கோவிலாங்குளம் (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), குருங்குளம் (தஞ்சாவூர்) தலா 5 செ.மீ, காரைக்கால் (காரைக்கால்), தென்காசி (தென்காசி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம்) தலா 4 செ.மீ , பாம்பன் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கொளுத்தும் கோடையை தணிக்க தமிழ்நாட்டில் மழை வரப்போகிறது!..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.