ETV Bharat / city

கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன்
செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன்
author img

By

Published : Oct 27, 2021, 4:43 PM IST

சென்னை : வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றை பொறுத்தமட்டில் வரும் 28 முதல் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன்

29 முதல் 31 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.