ETV Bharat / city

சன் ஃபார்மா விரிவாக்கத்துக்கு தடை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், விரிவாக்கம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

chennai high court news
chennai high court news
author img

By

Published : Jul 24, 2020, 2:11 PM IST

சென்னை: சன் ஃபார்மா விரிவாக்கம் செய்வதற்கான அனுமதி கடந்த மாதமே மறுக்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் ஃபார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய ஜூன் மாதமே அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிரெடிட் கார்டு பாயிண்டுகளை பணமாக மாற்றுவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி!

மேலும், சரணாலயம் அமைந்திருக்கும் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ என்ற சுற்றுப்பரப்பளவை 3 கி.மீ குறைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், வேடந்தாங்கல் நிலபரப்பு குறைக்கப்படுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அரசிடம் மனு அளித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.