நாடாளுமன்றத் தேர்தலால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அந்த வகையில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் களம் காண்கிறார்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறன் எளிதாக வென்றுவிடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்திருக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னையை டிடிவி தினகரன் ஒதுக்கியிருக்கிறார்.
மத்திய சென்னையில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் இருப்பதால் அந்த வாக்குகளை எளிதாக அறுவடை செய்யலாம் என்று நினைத்திருந்த திமுகவுக்கு, அந்த தொகுதியை எஸ்டிபிஐக்கு ஒதுக்கியதன் மூலம் தினகரன் திமுகவுக்கு செக் வைத்துள்ளார்என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சி சார்பில் மத்திய சென்னை வேட்பாளராக அக்கட்சியின் துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய வாக்குகள் அதிகளவு இருக்கும் மத்தியசென்னையில் இஸ்லாமிய வேட்பாளர் களமிறங்க இருப்பதால் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் தனது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.