ETV Bharat / city

மத்திய சென்னையில் தயாநிதிக்கு வெற்றி வாய்ப்பு?

தற்போதைய சூழ்நிலையில் ஆளும்கட்சியான அதிமுக மற்றும் பாஜக அரசுமேல் தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

maran
author img

By

Published : Apr 2, 2019, 3:13 PM IST

Updated : Apr 2, 2019, 5:08 PM IST

சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகள் உள்ளன. பொதுவாக மற்ற மாவட்ட மக்களின் மனநிலையைக் காட்டிலும் படித்தவர்கள் நிறைந்தசென்னையின் மனநிலை வேறு விதமாக இருக்கும். அதன் தாக்கம் எப்போதுமே அனைத்து தேர்தல்களிலும் தெரியும்.

மூன்று மக்களவைத் தொகுதிகளில் மத்திய சென்னை தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. மத்திய சென்னையை தொகுதியை பொறுத்தவரை வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள்அடங்கும். சென்னையின் மத்தி என்று சொல்வது போல் மிக முக்கியமான இடங்கள் மத்திய சென்னை தொகுதியில் இடம்பெறுகின்றன.சட்டப்பேரவை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட், அதிக அளவில் ஐடி நிறுவனங்கள் போன்ற முக்கிய இடங்கள் இந்த தொகுதியில் உள்ளன.

சாலை நெரிசல், தண்ணீர் பற்றாக்குறை எனும் இரு முக்கிய பிரச்னைகள் இந்த தொகுதியில் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அனைத்துக் கட்சிகளின் பரப்புரை அமைந்துள்ளது. மேலும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தன் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலைவாய்ப்பைஉருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்த பாஜக அரசு அதை நிறைவேற்றாதது உள்ளிட்டவைகள் தயாநிதிக்கு ஆதரவாக அமைய வாய்ப்பு உள்ளது.

திமுக ஆட்சியில் மத்திய சென்னையில் கட்டப்பட்ட பல பாலங்கள், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை வைத்து மக்களின் ஆதரவை பெற அக்கட்சி முயற்சிக்கிறது. ஆனால் தயாநிதி மாறன் மற்றும் திமுக மேல் வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் திமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மக்களவைத் தேர்தலிலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி சென்னை பெரும்பாலும் திமுகவினரால் கைப்பற்றப்படும். குறிப்பாக மத்திய சென்னை திமுகவின் கோட்டை என்றே சொல்லலாம். தற்போதையை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் கடந்த 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தலில் (61.68 & 46.82 விழுக்காடு வாக்குகளுடன்) வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்பு முரசொலிமாறன் மூன்று முறை மத்திய சென்னையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் மேல் உள்ள அதிருப்தி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் அக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால் மத்திய சென்னையில் திமுகவிற்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மேல்தமிழ்நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம் பால் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர், அதனோடு சாம் பால் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் பிஜேபி வாக்குகள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இதனுடன் சாம் பால் மாம்பழம் சின்னத்தில் நிற்பதால் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாத சின்னம் என்பதால் அதுவும் திமுகவிற்கு சாதகமாக அமையும். இது அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவிற்கு அடுத்தபடியாக அமமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தெகலான் பாகவி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சென்னை சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இது அமமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமீலா நாசர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இஸ்லாம் மதத்தினர், பெண்களின்வாக்குகளைகமீலா நாசர் அதிகப்படியாக பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

சென்னை மாநகரத்தில் மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை என மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. பொதுவாக மற்ற மாவட்ட மக்களின் மனநிலை காட்டிலும் சென்னை மக்களின் மனநிலை வேறு விதமாக இருக்கும். அதன் தாக்கம் எப்போதுமே அனைத்து தேர்தலிலும் தெரியும். 

மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில்  மத்திய சென்னை  தொகுதி மிகவும் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரை வில்லிவாக்கம், எழும்பூர், ஹார்பர், சேபாக், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய இடங்கள் அடங்கும். சென்னையின் மத்தி என்று சொல்வது போல் மிக முக்கியமான இடங்கள் மத்திய சென்னை தொகுதியில் இடம்பெறுகின்றது. தமிழக சட்டப்பேரவை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட், அதிக அளவில் ஐடி  போன்ற முக்கிய இடங்கள் இந்த தொகுதியில் உள்ளது.

பல முக்கிய இடங்கள் உள்ளதால் மக்களின் வருகை இந்த தொகுதியில் அதிகம் ஆகும். ஆகையால்  சாலை நெரிசல், தண்ணீர் பற்ற குறை என்னும் இரு முக்கிய பிரச்சனைகள் இந்த தொகுதியில் உள்ளது. இதன் அடிப்படியிலே அனைத்து கட்சிகளின் பிரச்சாரம் அமைந்துள்ளது. 

மேலும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தன் வேட்புமனு தாக்களுக்கு பிறகு செய்தியாளர்களிடம்  கூறினார். மத்திய சென்னையில் அதிக அளவில் பொறியியல் அலுவகம் உள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்த பிஜேபி அரசு தோற்றுள்ளது போன்றவை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைய வாய்ப்பு உள்ளது.  

திமுக ஆட்சியில் மத்திய சென்னையில் பல பாலங்களும், மெட்ரோ போன்ற திட்டங்களை வைத்து மக்களின் ஆதரவை பெற முயற்சித்து  வருகின்றனர். ஆனால் தயாநிதி மாறன் மற்றும் திமுக மேல் வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டுகள் திமுகவிற்கு சவாலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலிலும், சட்ட மன்ற தேர்தலிலும் சரி சென்னையை  பெரிதும் திமுகவினறால் கைப்பற்றப்படும். குறிப்பாக மத்திய சென்னை திமுகவின் கோட்டை என்றே சொல்லுகின்றனர். தற்போதையை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் கடந்த 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் (61.68 & 46.82 சதவீதம்) வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு முன்பு முரசொலி மாறன் மூன்று  முறை மத்திய சென்னையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் மேல் உள்ள அதிருப்தி  மற்றும் ஊழல் குற்றசாட்டுகளால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. ஆனால் மத்திய சென்னையில் திமுகவின் வெற்றி சதவிதேம் (64%) அதிகமாக உள்ளது. அடுத்தப்படியாக காங்கிரசின் வெற்றி சதவீதம் (18%) உள்ளது. இதனை தொடர்ந்துதான் அதிமுக (8%) வெற்றி சதவீதத்துடன் உள்ளது. தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால் மத்திய சென்னையில் திமுகவிற்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு என்று பார்க்கப்படுகிறது. 

தற்போதைய சூழ்நிலையில் ஆளும் கட்சியான அதிமுக மற்றும் மத்திய பிஜேபி அரசு மேல் தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புள்ளது. மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பால் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர், அதனோடு சாம்பால்  வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் பிஜேபி வாக்குகள் கிடைக்காத  சூழ்நிலை உள்ளது. இதனுடன் சாம்பால் மாம்பழம் சின்னத்தில் நிற்பதால் தொகுதி மக்களுக்கு அறிமுக இல்லாத சின்னம் என்பதால் அதுவும் அதிமுகவிற்கு சவாலாக அமையும். இது அனைத்தும்  அதிமுக கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்க படுகிறது. 

திமுகவிற்கு அடுத்தபடியாக அமமுக கூட்டணியில் உள்ள  இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சார்ந்த  வேட்பாளர் தெகலான் பாகவி இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சென்னை சிறுபான்மையினர்  வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இது அமமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம்  கட்சி வேட்பாளர் கமிலா நாசர் இடம்பெற அதிக வாயுப்புகள் உள்ளது. முஸ்லீம் சமூகத்தின்  வாக்குகளும், பெண்கள் வாக்குகளும் கமிலா நாசர்  அதிக படியாக பெறுவார் என்று சொல்லப்படுகிறது. 

Last Updated : Apr 2, 2019, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.