ETV Bharat / city

Watch Video: ஜெராக்ஸ் கடையில் செல்போன் திருட்டு - cell phone theft in xerox shop

சென்னையில் ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் பெண்ணின் செல்போனை அக்கடைக்கு வந்த நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஜெராக்ஸ் கடையில் செல்போனை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சி

author img

By

Published : Mar 3, 2022, 5:26 PM IST

சென்னை: ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் மீரா (35). இவர் தாம்பரம் சி.டி.ஒ காலனியில் ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். அந்த கடைக்கு வந்த ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வந்து வேண்டாம் என கூறிவிட்டு அவசரஅவசரமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர் மீரா கடையில் உள்ள மேசையின் மீது வைத்திருந்த செல்போனை பார்த்தபோது செல்போன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, ஜெராக்ஸ் எடுப்பதற்காக உள்ளே வந்தவர் மேசையின் மீது வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

ஜெராக்ஸ் கடையில் செல்போனை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சி

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளுடன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் செல்போன் திருடியவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விவசாயி வீட்டில் 40 சவரன் நகை திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.