டெல்லியிலிருந்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ராஜீவ் குமார், சுசில் சந்திரா, சந்திர பூஷண் குமார், உமேஷ் சின்ஹா ஆகியோர் உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட தேர்தல் ஆணையக் குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.
இதையடுத்து அவர்களை அரசு அலுவலர்கள் வரவேற்று, தேர்தல் ஆணையக் குழுவினர் கார்கள் மூலம் சென்னையில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
மதியம் 12 மணிக்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு தனித்தனியே சந்தித்து, கருத்துகளைக் கேட்கவுள்ளனர். பின்னர் மாலை 3.30 மணிக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுடனும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரை ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி, இன்றும் (பிப். 10), நாளையும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தும், ஆய்வும் நடத்துகின்றனர். மேலும், வரும் 12ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆய்வுசெய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஸ்டாலினுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய 2வது நோட்டீஸையும் ரத்துசெய்தது நீதிமன்றம்