சென்னை: விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மகன் வருண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று(அக்.04) இரவு ஏவிஎம் அவென்யூ வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவருடைய செல்போனை பறித்து சென்றார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், மர்ம நபர் செல்போன் பறித்த காட்சி பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.
இதுவும் படிங்க: அவரைப் பற்றி பேச விரும்பவில்லை - வெற்றிமாறன் குறித்த கேள்விக்கு 'ஜகா' வாங்கிய குஷ்பூ