இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ” சி.பி.எஸ்.இ கல்வி நிலையங்களில், 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், யூ டுயூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என தகவல்கள் வருகிறது. அவ்வாறு ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது சி.பி.எஸ்.இ நிர்வாகத்தால் சட்டத்திற்குட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களும், பெற்றோர்களும் எவ்வித குழப்பமும் அடையாமல், ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி