ETV Bharat / city

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்குப்பதிவு - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பினர் மீதும், மொத்தமாக 400 பேர் மீது 7 பிரிவின்கீழ் ராயப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதரவாளர்கள்
ஆதரவாளர்கள்
author img

By

Published : Jul 12, 2022, 12:23 PM IST

சென்னை: ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூலை 11) ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரத்தில் நடந்தது. கலவரத்தில் காவலர்கள் உள்பட 42 நபர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை காவல் துறையினர், கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் என மொத்தமாக 400 பேர் மீது ஏழு பிரிவின்கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.எம் சைதை பாபு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 22 பேர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் இரண்டாவது வழக்கை பதிவு செய்துள்ளனர்.

இதே சம்பவம் தொடர்பாக, இபிஎஸின் ஆதரவாளரான சென்னை 122ஆவது வட்ட துணை செயலாளர் காமராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 20 பேர்‌ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக போடப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஓபிஎஸ்? - ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.