இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மதுரை கருப்பாயூரணி கடைவீதியில் தனது கடை முன்பாக அமர்ந்திருந்துள்ளார் முதியவர் அப்துல் ரஹீம்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் அத்துமீறியுள்ளனர். அவர் தன் கடையைத் திறக்கவில்லை எனக் கூறியபோதும், காவலர்கள் முதியவரைத் தாக்க முற்பட்டுள்ளனர்.
அதனைக் கண்ட முதியவரின் மருமகன் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அவரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் முதியவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.
மக்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக அவர்கள் மீது லத்தியை சூழற்றும் காவல் துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கருப்பாயூரணியில் முதியவர் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதியவர் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.