சென்னை: கிழக்கு தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(30). இவருடைய மனைவி பிரியா(24) இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிய நிலையில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் முருகன் ஆன்லைனில் தொடர்ந்து ரம்மி விளையாடி வந்ததால், அதில் பல லட்சம் ரூபாய் பணம் இழந்து உள்ளார். மேலும் முருகன் பல இடங்களில் கடன் வாங்கி உள்ள நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் ஆளான முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து இன்று(நவ.18) காலை படுக்கை அறையின் கதவைத் திறக்காததால் அவரின் பெற்றோர் அதனை உடைத்துப் பார்த்தபோது முருகன் தூக்கில் இறந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தகவலறிந்து வந்த சேலையூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமான ஒரே வருடத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டிற்கு இடமளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு