ETV Bharat / city

'அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவை சிதைத்த அதிமுக கூட்டணி' - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Nov 27, 2020, 8:44 PM IST

சென்னை : அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்வி வாய்ப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியும், மத்திய பாஜக அரசும் கூட்டணிப்போட்டு சிதைத்துள்ளதாக திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

both-central-and-state-governments-have-shattered-the-government-doctors-higher-medical-education-opportunity-mk-stalin
“அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினை சிதைத்த அதிமுக கூட்டணி” - மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாணவர்களின் கனவினை சிதைத்த மத்திய பாஜக அரசு, இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் கல்விக் கனவினையும் பாழ்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு கடுமையாக வாதிட்டதன் காரணமாக இந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜக அரசின் இந்தச் சமூக நீதித் துரோகத்திற்குத் துணை போகும் வகையில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை அளித்து அரசாணை வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி அரசு, அதற்கான கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக அரசு விழா நடத்துவதிலும், அதற்கான விளம்பரங்களிலும் நேரத்தைச் செலவிட்ட முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் துளி கூட கவனம் செலுத்தவில்லை.

போராடிப் பெற்ற சமூக நீதியின் பயன் இந்தாண்டே அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 'நாங்க பாடம் படிச்சிட்டோம்... நீங்கதான் படிக்கனும்' - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.