ஊரடங்கு உத்தரவை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும்தான் கரோனா பரவுவதைத் தடுக்க முடியும். உத்தரவை மீறி வெளியே நடமாடும் மக்களால் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரவும் வாய்ப்பு ஏற்படும்.
அத்தியாவசிய தேவைகளைத் தமிழ்நாடு அரசு வழங்கும். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக அரசை பாராட்டுகிறேன்.
மிக மிகச் சவாலான காலகட்டத்தில் நாம் உள்ளோம். கரோனாவுக்கு எதிரான சவாலை தமிழ்நாடு மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன். அனைவரும் மூன்று வாரங்களுக்கு வீட்டில் பத்திரமாக இருங்கள்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எட்டாவது கரோனா கண்டறியும் மையம்!