ETV Bharat / city

குறைக்கப்பட்ட வங்கி வேலை நேரம்: 13ஆம் தேதி வரை நீட்டிப்பு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வருகின்ற 13ஆம் தேதி வரை வங்கி வேலை நேரம் குறைக்கப்படுவதாக, வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

’வங்கி வேலை நேரம் 13ஆம் தேதி வரை குறைப்பு’ - வங்கியாளர்கள் குழுமம்

author img

By

Published : Jun 6, 2021, 8:26 PM IST

தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கின் காரணமாக கரோனா தொற்று பரவல் சற்றே குறைந்துள்ளது. இதனால் வருகிற 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13ஆம் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து வங்கி கிளைகளுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ”காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வங்கி கிளைகள் செயல்படும். ஏற்கனவே அறிவித்ததுபோல வங்கி பரிவர்த்தனைகள் பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாற்று முறையில் செயல்பட வேண்டும்.

ரொக்கப் பரிவர்த்தனை, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான என்.இ.எப்.டி. எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ். எனும் உடனடி கட்டண சேவை, ஆர்.டி.ஜி.எஸ். என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்தத் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை வங்கிகள் வழங்குதல் வேண்டும்.

அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதையும் வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'நீச்சல் உடையில் கர்நாடக கொடி' - ஒரு வடு ஆறுவதற்குள் இன்னொரு வடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.