சென்னை கிண்டியிலுள்ள பிபிஓ ஒன்றில் பணிபுரிந்து வருபவர் அருண் (24). இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு 100 அடி ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தனியார் பேருந்து (KA 59 3366) அருணின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், அருணின் வலது கை முற்றிலும் முறிந்து உயிருக்குப்போராடிய நிலையில் மருத்துவத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் விபத்து குறித்து கோயம்பேடு காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.