ETV Bharat / city

சிதம்பரம் நடராஜர் ஆலய கனகசபை மண்டபத்தை திறக்கக்கோரிய போராட்டத்துக்கு தடை கோரி மனு - ban the protests inside and near the chidambaram temple

சிதம்பரம் நடராஜர் ஆலய கனக சபை மண்டபத்திற்குள் பக்தர்களை அனுமதிக்கக் கோரிய போராட்டத்துக்கு, தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Apr 2, 2022, 10:39 PM IST

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிகோரி, ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி சிதம்பரத்தைச் சேர்ந்த ராமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், "தீட்சிதர்களை விரும்பாத ஒரு குழுவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும், கோயில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி, கோயிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, கனகசபை மண்டபத்தை திறக்கும்படி, மாவட்ட வருவாய் அதிகாரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை வற்புறுத்துவதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போரட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், மேலும் கோயில் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாசலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிட வேண்டும்" எனவும் மனுதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.