ETV Bharat / city

'நீட் தேர்வு: வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள்... முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி - சென்னை

நீட் தேர்வு தொடா்பாக சில அரசியல் தலைவா்களின் வாக்குறுதிகளை நம்பி, மாணவர்கள் யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
author img

By

Published : Jun 18, 2021, 9:21 PM IST

சென்னை: நீட் தேர்வு குறித்து அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளிலும் மாணவர்களை சேர்ப்பதற்கு தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுக்கான அட்டவணையை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துவிட்டது.

நீட்டுக்கு தயாராகுங்கள்

நுழைவுத் தேர்வு அவசியம் என்று உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவத் தேர்வு ஆணையமும் என்று அறிவித்து விட்டதால், நீட் தேர்வு இனிமேல் கண்டிப்பாக நடத்தப்படும். அதை இனிமேல் நிறுத்த இயலாது. எனவே மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், சில அரசியல் தலைவா்கள் தங்களின் சொந்த நலனுக்காக கூறும் போலியான பரப்புரைகளுக்கும், வாக்குறுதிகளுக்கும் ஆளாகி விட வேண்டாம் என்று எல்லாப் பெற்றோர்களையும், பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

பாஜகவின் திட்டமில்லை

அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகள் அரசியல் நோக்கம் உள்ளவையாக இருக்கக்கூடும் அல்லது நீட் தேர்வின் அவசியத்தை அவர்கள் சரியான முறையிலும், பொருத்தமான நிலையிலும் புரிந்துக் கொள்ளாமல் இருக்கக்கூடும். மேலும் நுழைவுத்தேர்வின் அவசியம் குறித்து அந்தத் தலைவர்களுக்கு நுட்பமான பார்வை இல்லாமல் இருக்கும்.

நீட் தேர்வு குறித்து தவறான பிரசாரங்களும், தேர்தல் நேர உறுதிமொழிகளையும் வழங்கி உள்ளனர். அது நடக்க வாய்ப்பே இல்லை. நீட் தேர்வு என்பது பாஜக அரசின் திட்டமல்ல. 2005-2006ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்டதாகும்.

நீட்டால் சமூக நீதிக்கு பாதிப்பில்லை

உலகம் முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா் சோக்கைக்கான நடைமுறைகளில் ஒன்றாக நுழைவுத் தேர்வு உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பல்வேறு வகையான பாடத்திட்டங்களைப் படித்து வரும் மாணவா்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தரத்தை உறுதி செய்ய நுழைவுத் தேர்வு அவசியமாகும்.

நீட் தேர்வுக்கு முன்பு பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவா்கள் தயாராகி வந்தனா். இப்போது ஒரே தேர்வு மட்டும் நடைபெறும் என்பதால் மாணவா்களுக்கு பணம், நேரம், அவா்களின் கடின உழைப்பு மீதமாகிறது. இதனால் தமிழ்நாடு மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மேலும், அது இட ஒதுக்கீட்டையோ, சமூக நீதியையோ பாதிக்கவில்லை.

மாணவர்கள் திறமையானவர்கள்

நீட் தேர்வு தமிழ்நாடு மாணவா்களுக்கு கடினமானது என்று (பொய்) பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மாணவா்கள் திறமையானவா்கள். சமச்சீா் கல்வியால் 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களின் அறிவியல், கணித பாடங்கள் நீா்த்துப்போயின.

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலின் தரத்துக்கு குறைவாக தமிழ்நாடு மாணவா்களின் பாடத்திட்டங்கள் இருந்ததாலும், பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படாமல், 12 ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்பட்டதாலுமே நீட் தேர்வு தமிழ்நாடு மாணவா்களுக்கு கடினமானதாக இருந்தது. தற்போது பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்டதால் நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவா்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனா்.

நன்கொடையுமில்லை ஊழலுமில்லை

நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களிலும், தனியார் பல்கலைக்கழங்களிலும் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒன்றிய, மாநில அரசுகளே நடத்துவதால் நன்கொடைக் கட்டணம் என்ற கொடுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

மேலும் மாணவர் சேர்க்கையிலும் எந்த ஊழலும் நடைபெறுவதற்கு வாய்ப்பே இருக்காது. நீட் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்கள் வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் வழி செய்கிறது.

நீட் தேர்வுகள் தனியாா் பயிற்சி மைய கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டு முழுவதும் சரியானது அல்ல. ஏனெனில், தனியாா் பயிற்சி மைய கலாசாரம் நீட், ஜேஇஇ தேர்வுகள் வரும் முன்பே இருந்து வந்த ஒன்றுதான் .

மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்குத் தயாராகும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவின் பக்தை கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.