தமிழ்நாட்டில் கரோனா ரைவசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள தளர்வுகளில் மத வழிபாட்டுத் தலங்கள், பொது நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிக்கான தடைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனாவைக் கட்டுபடுத்தும் விதமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வருகிற சனிக்கிழமையன்று பக்ரீத் பண்டிகையை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாட உள்ளனர். இதனால் பக்ரீத் பண்டிகையன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியோடு தொழுகை செய்வதற்கு மெரினா அல்லது தீவு திடலில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சி சார்பாக மாநில தலைவர் அப்துல் ரஹீம் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.