ETV Bharat / city

‘அயோக்யா’ பட ரிலீசுக்கு தொடரும் சிக்கல்!

சென்னை: இன்று விஷால் நடிப்பில் உருவான ‘அயோக்யா’ படம் ரிலீஸ் என்று அறிவித்திருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் வெளிவரவில்லை.

விஷால்
author img

By

Published : May 10, 2019, 2:54 PM IST

Updated : May 10, 2019, 3:36 PM IST

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிகர் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவான திரைப்படம் ‘அயோக்யா’. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம்.

கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி அயோக்யா வெளியீடு என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடியாததல், படக்குழு ‘அயோக்யா’ திரைப்படத்தின் வெளியீடு ‘மே 10’ (இன்று) என அறிவித்திருந்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் சிக்கல் எழுந்துள்ளதால் இன்றும் படம் ரிலீசாகவில்லை. இதனால் ‘அயோக்யா’ திரைப்படத்திற்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது குறித்து, நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு நடிகனாக அனைத்து வேலைகளையும் நான் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகமது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன், எனது பயணம் தொடரும்’ என ட்வீட் செய்துள்ளார்.

'அயோக்யா' படம் திரையிடுவதில்  சிக்கல்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்  வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிகர் விஷால், ராஷி கண்ணா நடிப்பில்  உருவான அயோக்கியா படம் இன்று வெளி வருவதாகயிருந்த நிலையில் இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் இன்று வெளியாகவில்லை.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’  படத்தின் ரீமேக் தான் அயோக்கியா.  நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம்,  ஏப்ரல் 19-ம் தேதி வெளியீடு என்று ஏற்கனவே அறிவித்தார்கள். படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் இன்று வெளியீடு என்று அறிவித்திருந்த நிலையில் இன்றும் இந்த படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

சிக்கலுக்கு காரணம் டெம்பர்' படத்தின் தயாரிப்பாளர் தான். படத்தின்  அனைத்து மொழி உரிமைகளையும் இந்தி திரையுலகை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டார். இவை தவிர தமிழ் மொழி உரிமையை தனியாகவும் இன்றுள்ள நிலையில் அனைத்து மொழி உரிமைகளையும் வாங்கியவர் எப்படி தமிழ் மட்டும் தனியாக விற்கலாம். எனக் கூறி தனக்கு  3 கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே படம் வெளியிட முடியும் என்று கூறியுள்ளார். சிக்கல் இன்னும் தீர்க்கப்படாத தால் அயோக்கிய படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் 'அயோக்யா' திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் செய்யப்பட்டு இன்று  காலை 8 மணிக்கு காட்சி என்ற நிலையில் திடீரென இந்த படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை என்றும் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் நான் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகமது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன் என்றும் எனது பயணம் தொடரும் என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.

Last Updated : May 10, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.