ETV Bharat / city

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தலைவர்கள் வேடமணிந்து விழிப்புணர்வு! - தலைமை ஆசிரியர் யசோதா பாய்

மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க திருவள்ளுவர், அப்துல் கலாம், இந்திரா காந்தி, பாரதியார் உள்ளிட்ட தலைவர்கள்போல் குழந்தைகளுக்கு வேடமிடப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை, தலைவர்கள் வேடமணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனாம்பேட்டை
author img

By

Published : Jul 11, 2021, 6:31 PM IST

Updated : Jul 12, 2021, 8:51 AM IST

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதற்காக பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜூலை.11) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது பள்ளிக் குழந்தைகள் திருவள்ளுவர், அப்துல் கலாம், இந்திரா காந்தி, பாரதியார் போன்ற உருவங்களில் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை ஆசிரியர் யசோதா பாய், "தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாமல் பல குழந்தைகள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பான கல்வியோடு ஆங்கில வழிக் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது.

மாநகராட்சி பள்ளியும் சலைத்ததல்ல

மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தலைவர்கள் வேடமணிந்து விழிப்புணர்வு

இதனால், மாணவர்களை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்குமாறு வீடுதோறும் சென்று பெற்றோர்களை சந்தித்து மாநகராட்சிப் பள்ளிகளின் சாதனைகள் குறித்து துண்டுப்பிரசுரம் அளித்து வருகிறோம். மேலும், மாநகராட்சிப் பள்ளி சாதனைகளை அதிக அளவில் மக்களிடையே கொண்டு சென்றால் அவர்களது குழந்தைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வழக்கமாக, ஜூலை மாத இறுதியில் தான் 100 குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்ப்போம். ஆனால் தற்போது 100 குழந்தைகளை சேர்த்து விட்டோம் என்பதால் அதை 200ஆக மாற்ற வேண்டும் என்பதற்காக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

அரசு மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களை விட மாநகராட்சியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிப் புத்தகங்களில் ஜெயலலிதா புகைப்படம் - வலுக்கும் சர்ச்சை

Last Updated : Jul 12, 2021, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.