ETV Bharat / city

மத்திய அரசை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 22, 2019, 6:27 PM IST

சென்னை: வாடகை வாகன கட்டணங்களை உயர்த்தி ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வலுப்பெற மத்திய அரசு வழி செய்வதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இன்னோடா தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

auto owners association press meet

ஆட்டோ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கிண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பேசிய இன்னோடா தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் அமெரிக்கை நாராயணன், ’வாகன இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளை உயர்த்தியுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் வாயிலாக புதுப்பித்தல் கட்டணங்கள், பதிவுக் கட்டணங்கள், அபராதக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளது. இந்த சட்டத்தை முற்றிலும் கைவிடக் கோரி இந்த மாதம் 24ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளோம். பலகோடி நபர்கள் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்கிவருவதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தற்போது திருத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டமானது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ளது.

குறிப்பாக, ஆட்டோ வாகன பதிவுக் கட்டணம் 600 ரூபாயிலிருந்து ஐந்தாயிரமாகவும், ஆட்டோ வாகன பர்மிட் ரினிவல் கட்டணம் 215 ரூபாயிலிருந்து ஏழாயிரத்து 500 ரூபாயாகவும், ஆட்டோ வாகன எப்.சி கட்டணம் 625 லிருந்து பத்தாயிரமாகவும் உயர்த்தியுள்ளனர்.

இது மறைமுகமாக இந்த தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டு செல்வதற்கும் ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பெற வழிவகை செய்வதற்கும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்றார்.

Intro:

Body:tn_che_01_auto_owners_association_press_meet_byte_visual_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.