சென்னை அயனாவரம் சண்முகம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(41). அவர் ஆவின் பால் வியாபாரியாகவும், வில்லிவாக்கம் தெற்கு தொகுதி பாஜக பொருளாளராகவும் உள்ளார். இந்த நிலையில், அவர் நேற்றிரவு(அக்.21) அயனாவரம் சோமசுந்தரம் தெரு சந்திப்பில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த அயனாவரம் ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சசிகுமார்(29), கத்தி, சைக்கிள் செயினால் ஜெயக்குமாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். அதில் காயமடைந்த ஜெயக்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், செப்.30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு வைக்கப்பட்ட விளம்பர பேனரை ஆட்டோ டிரைவர் சசிகுமார் கிழித்ததால், அவர் மீது ஜெயக்குமார் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் சசிகுமார் மன்னிப்பு கேட்டதை அடுத்து புகார் திரும்பப் பெறப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், ஜெயக்குமாரை தாக்கி உள்ளார்" என்பது தெரியவந்துள்ளது. தற்போது சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவ கல்வியில் உள் ஒதுக்கீடு - பாஜக, அதிமுகவுக்கு ஸ்டாலின் வைத்த செக்!