ETV Bharat / city

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க கால்வாய் தூர்வாரிய மாணவர் - உதவி செய்த துணை ஆணையர்

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் வாங்குவதற்காக கால்வாயைத் துார்வாரிய மாணவருக்கு புளியந்தோப்பு துணை ஆணையர் செல்போன் வாங்கிக்கொடுத்து உதவியுள்ளார்.

cellphonegift
cellphonegift
author img

By

Published : Sep 20, 2020, 12:54 AM IST

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரின் மகன் சாமூவேல். இவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மாணவர் சாமூவேலிடம் செல்போன் இல்லாததால் அவரால் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் படிப்பில் உள்ள ஆர்வத்தால், செல்போன் வாங்குவதற்காக மாணவர் சாமூவேல், கோயம்பேடு பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிக்குச் சென்றுள்ளார். படிப்பதற்காக கால்வாய் துார்வாரிய இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா, மாணவர் சாமூவேலுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய செல்போன் ஒன்றையும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் பரிசாக வழங்கியுள்ளார்.

சிரமப்பட்ட மாணவருக்கு உதவிய துணை ஆணையரின் செயல் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை: பெரம்பலூர் ஆட்சியர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.