ETV Bharat / city

நாளைக்கு வச்சுக்குவோம் வாங்க... - எஸ்.பி. வேலுமணியை விவாதம் செய்ய அழைத்த திமுக அமைச்சர்கள் - எஸ்பி வேலுமணி

110 விதியின்கீழ் அதிமுக அறிவித்த திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 23) காலை அரை மணிநேரம் விவாதம் வைத்துக்கொள்வோமா என திமுக அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணியிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

SP VELUMANI AND DMK MINISTERS
SP VELUMANI AND DMK MINISTERS
author img

By

Published : Mar 22, 2022, 5:35 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது. நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோரும் தாக்கல் செய்தனர். இதையடுத்த, இந்த இரு பட்ஜெட்கள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று (மார்ச் 21) தொடங்கியது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) திமுக அவை முன்னவர் துரைமுருகன், 'நீங்கள் செய்தீர்களா' என நீங்கள் கேட்க, 'நீங்கள் செய்தீர்களா' என்று நாங்கள் கேட்க, வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ரெண்டு பேருமே செய்யவில்லையோ என யோசிப்பார்கள் என்று சொன்னதால் அவையில் சிரிப்பலை நிலவியது.

தொடர்ந்து பேசிய துரைமுருகன்: "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா எனக் கேட்கிறீர்கள். இந்த அவையிலேயே 110 விதியின்கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படித்ததை எல்லாம் நீங்கள் செய்தீர்களா என, நாங்கள் திருப்பிக் கேட்டால் உங்களால் (அசோக்குமார், அதிமுக உறுப்பினர்) பதிலளிக்க முடியாது"

எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி: "புள்ளி விவரமாக என்னென்ன செய்தோம் என்பதை சொல்லி இருக்கின்றோம்"

துரைமுருகன்: "வெளியே கொடுத்த வாக்குறுதியை கேட்டீர்களே?, இங்கு 110 விதியில் கொடுக்கும் வாக்குறுதி, அதை செய்யவில்லையென்றால் 'Breach of Trust'. அந்த வாக்குறுதியை நாளை விவாதம் வைத்துக் கொள்ளலாமா, எத்தனை நிறைவேற்றினீர்கள் என விவாதிக்கலாம்?"

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: "2016 தேர்தலில் தமிழ்நாட்டில் படித்த 50 ஆயிரம் இளைஞர்களுக்கு 'Youth Brigade' என்ற திட்டத்தின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்கள், அந்தப் பட்டியலை கொடுங்கள்"

எஸ்.பி. வேலுமணி: "110 விதியில் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம், 90 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில 110 விதியின் கீழான அறிவிப்புகள் நிறைவேற்ற முடியாமல் போனது. மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளைத்தான் உறுப்பினர் கேள்வியாக கேட்டார்"

துரைமுருகன்: "நாளை காலை அரை மணி நேரம் விவாதம் வைத்துக்கொள்ளலாமா? 110இல் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுவதுமாக நிறைவேற்றிவிட்டீர்களா என்பதை பேசுங்கள், விவாதிக்கலாம்"

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: "2011இல் உங்களின் (அதிமுக) முக்கிய வாக்குறுதியே, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் தருவோம்' என்று சொன்னீர்கள், சென்னையில் 10 பேருக்கு கொடுத்தீர்கள். தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டதா"

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அறிக்கையை இதே அவையில் நான் சமர்ப்பித்துள்ளேன். 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட எத்தனை அறிவிப்புகளுக்கு அரசாணை போடப்பட்டுள்ளது, எத்தனை திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை, அது சரியில்லை என்றால் என்றால் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். அதை நாளை இந்த அவையில் வைக்கின்றோம். விவாதிக்கலாமா?" என கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, அவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

இதையும் படிங்க: 'ஒரே ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையைக் குறைத்துள்ளோம்' - நிதியமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.