சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடாமலேயே அதனை போட்டதாக கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள வீடியோவில், "கரூர் மாவட்டத்தில் சாலை போடாமலேயே அதனை போட்டதாக கோடிக்கணக்கில் நடைபெற்ற ஊழலில் 4 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பணியிடை நீக்கம் செய்தது வரவேற்க்கத்தக்கது.
இருப்பினும், இந்த ஊழலில் தொடர்புடையவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்ய வேண்டும். இந்நிலையில் காஞ்சிபுரத்திலும் சாலை அமைப்பதில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோரிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு