64ஆவது கிராமி விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்.ஜி.எம். கிராண்ட் கார்டன் அரேனாவில் நடந்து வருகிறது. இந்த கிராமி விருது இசை கலைஞர்களுக்காக வழங்கப்படும் முக்கிய விருதாகும்.
ஜனவரி இறுதியில் நடத்தப்படும் இவ்விரு விழா கரோனா காரணமாக தாமதமாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருந்து ஏராளமான இசை கலைஞர்கள், திரை இசை பிரபலங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் இந்திய திரை இசையின் பிரம்மாண்டம் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் இவ்விழாவில் பங்கேற்றுள்ளார்.
![கிராமி விருது விழாவில் மகனுடன் ஏஆர்ரகுமான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-rahman-grammy-script-7205221_04042022123724_0404f_1649056044_414.jpg)
அப்போது அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு உத்தரவு