ETV Bharat / city

ராகுலுக்கு 'தமிழன்'ஆக அண்ணாமலையின் பதில் இதுதான்!

தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்ற ராகுலின் கருத்துக்குப் பதிலளித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் இழைத்ததாக வரலாற்றுச் சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

ராகுலுக்கு அண்ணாமலையின் பதில்
ராகுலுக்கு அண்ணாமலையின் பதில்
author img

By

Published : Feb 3, 2022, 1:47 PM IST

Updated : Feb 4, 2022, 9:26 AM IST

சென்னை: குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது நேற்று (பிப்ரவரி 2) ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்தார். மோடியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவால் தனது வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சிக்கு வரவே முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.

இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் அண்ணாமலை அவரது ட்வீட்டில், "நேற்று நாடாளுமன்றத்தில் திடீரென ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசியது எப்போதும்போல் சிரிப்புதான் வருகிறது.

அப்போது அவர், 'தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வரவே முடியாது' என்று சம்பந்தமில்லாமல் ஏகபோக வசனத்தில் பேசியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று இந்த மாபெரும் தமிழ் மண்ணின் மகனாக ராகுல் காந்திக்கு வழிகாட்டுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • We are as usual amused by Shri @RahulGandhi ji’s sudden outburst in Parliament today

    In his incoherent monologue, he mentioned ‘@BJP4TamilNadu can never come to power in Tamil Nadu’.

    Let me guide Shri @RahulGandhi ji on what will happen soon, as a son of this great Tamil land.

    — K.Annamalai (@annamalai_k) February 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

1. நீங்கள் ஒரு கட்சியாக தமிழ்நாட்டை சில காலம் ஆட்சி செய்தீர்கள். 1965ஆம் ஆண்டு உங்கள் தாத்தாவும், 1986ஆம் ஆண்டு உங்கள் தந்தையும் இந்தியைக் கட்டாயமாக்கினர். தயவுசெய்து தற்போதைய தேசிய கல்விக் கொள்கையைப் படியுங்கள்!

2. பெருந்தலைவர் காமராஜரை அவமானப்படுத்தினீர்கள்.

3. 1974ஆம் ஆண்டு உங்கள் பாட்டியால் கச்சத்தீவு வெளிநாட்டுக்குத் தாரைவார்க்கப்பட்டது.

4. இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்தவற்றிற்கு உங்கள் கட்சிதான் காரணம்.

நினைவிருக்கட்டும்: 2009!

நமது பிரதமர் 50,000+ வீடுகள் மூலம் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புகிறார்.

5. ஜல்லிக்கட்டு, ‘காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு’ என்று சொல்லி தடைசெய்யப்பட்டது. நமது பிரதமர் நீதிமன்றங்களில் போராடி அதனை மீண்டும் தமிழ் மக்கள் பெறும்வகையில் மீட்டெடுத்தார்.

நீங்கள் (காங்கிரஸ்) தற்போது திமுகவிடமிருந்து பெற்ற ஆக்சிஜன் துணையுடன் ஐசியுவில் இருக்கிறீர்கள். நாங்கள் இப்பொழுது புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறோம்.

பிரதமரின் உன்னதமான நோக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி! இது ஒரு மைல்கல், வெகுவிரைவில் அடுத்த சந்திப்பு தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுடனும் நரேந்திர மோடியுடனும் இருக்கின்றனர். 'வரலாற்றை' மறக்காதீர்கள் சார். மறுபடியும் அதைச் செய்தால் கண்டிக்கப்படுவீர்கள். அமேதியில் உங்களுக்கு நடந்ததைப்போல!

இவ்வாறு ராகுலுக்கு அண்ணாமலை வரலாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: பாக்., சீன விவகாரம்: ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதிலடி!

Last Updated : Feb 4, 2022, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.