ETV Bharat / city

கரோனா பகுதிகள் - அண்ணா பல்கலைக்கழகம் வரையறை!

author img

By

Published : Apr 15, 2020, 6:57 PM IST

Updated : Apr 15, 2020, 7:06 PM IST

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள பகுதிகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையத்தின் மூலம் கண்டறிந்து வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

university
university

இந்தியா முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 1200க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள மக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியில் செல்லவோ, வெளியாட்கள் யாரும் உள்ளே வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்கள் செய்தாலும், நோயாளிகளின் பகுதிகளை வரையறுப்பது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.

எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொலை உணர்வு மையத்தின் மூலம் கணக்கெடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருக்கள், வீடுகள் உள்ளிட்ட புவியியல் வரைபடம் சேட்டிலைட் மூலம் தயார் நிலையில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி நோய் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் பகுதியைச் சுற்றி எந்தெந்த தெருக்கள் வருகின்றன, எத்தனை வீடுகள் இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயார் செய்து அளிக்கின்றனர். அதனடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியினை வரையறை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கரோனா பகுதிகள் - அண்ணா பல்கலைக்கழகம் வரையறை!

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மைய இயக்குநர் ராமகிருஷ்ணன் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மையத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களின் புவியியல் வரைபடங்கள் உள்ளன. அந்த வரைபடங்களில் கிராமத்தில் உள்ள தெருக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் செயற்கைக்கோள் வரைபடத்தின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வகையான வீடுகளும் குறிக்கப்பட்டு, அந்தத் தகவல் பொது சுகாதாரத்துறையிடம் அளிக்கப்படும்.

அத்தகவலின் அடிப்படையில் நோய்த்தொற்று உள்ளவர் வசிக்கும் பகுதியைச் சுற்றி, பாதுகாக்கப்பட்ட தூரத்தில் வரும் தெருக்கள் மற்றும் வீடுகளின் விவரத்தினை அளித்து வருகிறோம். அதனையடுத்து, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் மேற்கொள்ளும் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதுவரை பெறப்பட்ட கரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Last Updated : Apr 15, 2020, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.