ETV Bharat / city

சூரப்பா விவகாரம்! - அண்ணா பல்கலை. பதிவாளரிடம் விசாரணை! - துணைவேந்தர் சூரப்பா

சென்னை: துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று விசாரணை அதிகாரியிடம் வழங்கினர்.

university
university
author img

By

Published : Dec 8, 2020, 4:40 PM IST

Updated : Dec 9, 2020, 10:45 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமனம் செய்து, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டார்.

பின்னர், விசாரணை அதிகாரியான நீதிபதி கலையரசன், தனக்கு வந்த புகார்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியை கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் ஆணையம் முன் ஆவணங்களை ஒப்படைக்காததால், பதிவாளர் கருணாமூர்த்திக்கு ஆவணங்களை ஒப்படைக்க சொல்லி விசாரணை அதிகாரி அழைப்பாணை அனுப்பினார்.

அண்ணா பல்கலை. பதிவாளரிடம் விசாரணை

அதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட 6 அதிகாரிகள் இன்று, ஆவணங்களை 3 அட்டைப் பெட்டிகளில் வைத்து கொண்டு வந்து, விசாரணை அதிகாரியிடம் நேரில் ஒப்படைத்தனர். அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீதிபதி கலையரசன் விசாரணை மேற்கொண்டார். மேலும், ஆவணங்களை விசாரணைக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த கருணாமூர்த்தி, விசாரணை அதிகாரி கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரபல பாடகர் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட பெண்கள்: காவல் துறையில் புகார்!

Last Updated : Dec 9, 2020, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.