சென்னை: பொறியியில் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளங்களான www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேர 3 நாட்களில் 57 ஆயிரத்து 513 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்க 33 ஆயிரத்து 552 மாணவர்கள் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். 22,960 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்