அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சசிகலா, மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு வீட்டிலேயே மரியாதை செலுத்துவார்.
பொதுச்செயலாளர் வழக்கில் நிச்சயமாக நல்லவிதமான சாதகமான தீர்வு சட்டப்படி கிடைக்கும். கெமிக்கல் ரியாக்சன் இருப்பதால்தான் அச்சத்தில் நிறைய பேர் பேசிவருகின்றனர். அமமுக, திமுகவின் பி டீம் எனக் கூறுவது, சிரிப்புதான் வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பது வாக்காளர் மத்தியில் உள்ள எண்ணம். அவர்களின் வாக்கு நிச்சயம் அமமுக கூட்டணிக்கு கிடைக்கும். தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம். அதன்பின் அதிமுகவை மீட்போம். கூட்டணி குறித்து பாஜக எதுவும் எங்களிடம் பேசவில்லை.
சசிகலாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஸ் எடுத்தால் நிச்சயம் வரவேற்போம். பரதன் ஆகிவிட்டார் என நினைத்துக்கொள்வேன். அதிமுக, அமமுக இணைக்க பாஜக எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.