ETV Bharat / city

'மீண்டும் பரிசுப்பெட்டகம் சின்னம் வேண்டும்' -அமமுக கோரிக்கை - gift box

சென்னை: நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அமமுக
author img

By

Published : Apr 13, 2019, 3:15 PM IST

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், டிடிவி தினகரனின் அமமுக-விற்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தையே மீண்டும் ஒதுக்க வேண்டும் எனக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முஸ்தஃபா மனு அளித்தள்ளார். மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை மனுவை அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முஸ்தஃபா, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் நிலையங்களில் மோடியின் படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் வழங்கப்படுவதைத் தடுத்து, அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம் என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.04.19

நடைபெற உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமமுக சார்பில் கோரிக்கை மனு...

மே மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பரிசுப் பெட்டகம் சின்னத்தையே தினகரனால் அறிவிக்கப்படும் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அமமுக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முஸ்தாபா மனுவினை கொடுத்தார். மேலும் அவர் பேட்டியளிக்கையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் நிலையங்களில் மோடியின் படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள் வழங்கப்படுவதை தடுத்து, அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம் என்றார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.