சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரான ராமசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ’அம்மா உணவகம்’. ஆனால், அந்தத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், பல அம்மா உணவகங்கள் மூடும் நிலையில் உள்ளது ” என்றார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ” நாங்கள் அம்மாவையும் மறக்கவில்லை, அம்மா ஆரம்பித்த திட்டத்தையும் மறக்கவில்லை. தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. எங்கும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை; மூடும் திட்டமும் இல்லை ” என்று கூறினார்.
இதையும் படிங்க: 'கோரிக்கை வைத்தால் கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்கப்படும்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி