சென்னை: வருகிற 14ஆம் தேதி அமித் ஷா மீண்டும் சென்னை வருகிறார். அன்றைய தினம் அவரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும் விசாரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமித் ஷா கடந்த முறை சென்னை வந்தபோது அதிமுக, பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் வேட்பாளரை பாஜக மேலிடத் தலைவர்கள் அறிவிப்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர்கள் பேசிவரும் நிலையில் அமித் ஷா வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது. சட்டப்பேரவை தேர்தல் வழக்கம்போல் மே மாதத்தில் நடைபெறுகிறது.