சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் நடத்திய பணி நியமன வளாக தேர்வில் பி. டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவராண புரஞ்சாய் மோகனை அமேசான் ஜெர்மனி நிறுவனம் 1 கோடி ஊதியத்தில் பணி நியமனம் செய்துள்ளது.
பணி நியமனம் செயப்பட்ட மாணவர் புரஞ்சாய் மோகனுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலை வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி அமேசான் நிறுவனத்தின் பணி ஆணையினை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இது சம்மந்தமாக சென்னையில் உள்ள ரமதா பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டி. ஆர். பாரி வேந்தர் கூறியதாவது:
"எஸ்.ஆர்.எம் நிறுவனம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவங்களின் வளாக பணி நியமன தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எஸ்ஆர்எம் காட்டாங்குளத்தூர், மோடிநகர், ராமாபுரம், வடபழனி வளாகங்களின் மூலம் பயின்ற மாணவர்கள் 2020ம் ஆண்டில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், கடந்தாண்டு(2021) 8,000 பேரும், இந்தாண்டு(2022)10,089 பெறும் பணி ஆணை பெற்றுள்ளனர்", என தெரிவித்த அவர்.
இந்தாண்டு மாணவ மாணவியருக்கான பணி நியமன வளாக தேர்வு காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஜூலை மாதம் 2021 தொடங்கியது. இதில் கடந்த மாதம் வரை சர்வதேச அளவில் முன்னணி நிறுவங்களான அமேசான், பேபால், கூகுள், டொயோட்டா, டிசிஎஸ், காக்னிஜீன்ட், விப்ரோ, உள்ளிட்ட 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியார்களை தேர்வு செய்தனர் என தெரிவித்தார்.
"இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அந்த நிறுவனங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் எஸ்.ஆர்.எம்மில் பி. டெக் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்டருமெண்டஷன் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் புரஞ்சாய் மோகன் என்ற மாணவரை அமேசான் ஜெர்மனி என்ற பன்னாட்டு நிறுவனம் ஆண்டுக்கு ₹1கோடி ஊதியத்தில் பணி நியமனம் செய்துள்ளது", என பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது - நம்பிக்கை உரை நிகழ்த்திய முதலமைச்சர்!