கரோனா தொற்றைத் தடுக்கும்வகையில் வருகிற மே மூன்றாம் தேதிவரை மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில், காணொலி மூலமாக உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் ஏழு மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 தொடங்கி 28ஆம் தேதி வரையும் தீவிர ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நான்கு நாள்களில் கீழமை நீதிமன்றங்கள் வழக்குகளை காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற பணியாளர்கள், உதவியாளர்களும் காணாலி கலந்தாய்வு, வாட்ஸ்அப் மூலமாகவே பணியில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடக்கூடாது: எஸ்.பி எச்சரிக்கை