ETV Bharat / city

ஏழு தமிழர்கள் சிறையில் இருப்பது மன வலியைத் தருகிறது - சீமான்

சென்னை: தற்போது சிறையில் உள்ள ஏழு தமிழர்கள் குற்றமற்றவர்கள் என அனைவருக்கும் தெரியும் என்றும் அவர்கள் சிறையில் இருப்பது மன வலியைத் தருவதாகவும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Seeman
author img

By

Published : Oct 18, 2019, 6:23 PM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எழுவர் விடுதலை குறித்து ஆளுநருக்கு ரவிச்சந்திரன் எழுதிய கடிதம் குறித்த கேள்விக்கு, "இது 28 ஆண்டு கால அரசியல், சட்ட, உணர்வு ரீதியான கண்ணீரும் கவலையும் தோய்ந்த ஒரு போராட்டம். நீதிமன்றம், மாநில அரசு நினைத்தால் விடுதலை செய்து கொள்ளலாம் எனக் கூறிய பின்பும்கூட தீர்மானம் போடப்பட்டு ஆளுநரின் ஒரே ஒரு ஒப்புதலுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை. தற்போது சிறையிலுள்ள இந்த ஏழு பேரும் சம்பந்தமில்லாத அப்பாவிகள்.

இந்த வழக்கை விசாரித்த மோகன்ராஜ், ரகோத்தமன், தியாகராஜன் ஆகியோர் அனைவரும் இந்த ஏழு தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்று கூறிய பிறகும்கூட இந்தக் கால நீட்டிப்பு என்பது மிகுந்த மன வலியைத் தருகிறது"என்று கூறினார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

ரஜினிகாந்த் இமயமலை பயணம் அவருடைய தனிப்பட்ட பயணம் என்றும் அதுகுறித்து கருத்து கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - திமுக

Intro:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:நாம் தமிழர் கட்சி ஒருங்கினைபாளர் சீமான் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

7 பேர் விடுதலை விரைவில் வேண்டும் என்று ரவிச்சந்திரன் ஆளுநருக்கு எழுத்தியம் கடிதம் குறித்த கேள்விக்கு

இது 28 ஆண்டு கால அரசியல் போராட்டம் சட்ட போராட்டம் உணர்வு ரீதியான கண்ணீரும் கவலையும் தோய்ந்த போராட்டம்

நீதிமன்றம் மாநில அரசு நினைத்தால் விடுதலை செய்து கொள்ளலாம் என கூறிய பின்பு தீர்மானம் போடப்பட்டு ஆளுநரின் ஒரே ஒரு ஒப்புதல் கையெழுத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது

ராஜீவ் கொலை வழக்கில் உள்ள 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்று அனைவருக்கும் தெரியும் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உயிரோடு இல்லை இந்த ஏழு பேரும் சம்பந்தமில்லாத அப்பாவிகள்

இந்த வழக்கை விசாரித்த மோகன்ராஜ் மற்றும் ரகோத்தமன் உயர் அதிகாரி தியாகராஜன் ஆகியோர் 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்று கூறிய பிறகும் இந்த கால நீட்டிப்பு என்பது மிகுந்த மன வலியைத் தருகிறது இந்த மன வலியோடு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் கருணையோடு பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்தார்

நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 50 லட்சம் பணத்தை மக்கள் இறை பிடித்துள்ளனர் இது யாருடையது என்று கண்காணித்து அந்த கட்சியை தகுதியைப் நீக்கம் செய்ய வேண்டும் அந்த வேட்பாளரை போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்

ரஜினிகாந்த் இமயமலை பயணம் குறித்த கேள்விக்கு

ரஜினிகாந்த் அவர்கள் இமயமலைக்கு செல்வது புதிதல்ல படப்பிடிப்பு முடிந்து உடனும் மன அமைதிக்காகவும் இமயமலைக்கு செல்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார் அது அவருடைய தனிப்பட்ட பயணம் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.