சென்னை: உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானுக்கு சென்று உயர்கல்வி பயில செல்லவேண்டும் என்றால் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கு இணையில்லாத பட்டப் படிப்புகளை வெளிநாடுகளில் அதிக செலவில் படிப்பதால், இந்தியாவில் வேலை கிடைப்பதில்லை.
வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு இந்தியாவில் வேலை கிடைக்குமா? பட்ட மேற்படிப்பு படிக்க இயலுமா? என்பதை சரிபார்த்த பின் சேர வேண்டும்.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில அதிக செலவை எதிர்கொள்வதுடன், அந்த செலவும் வீணாகி விடுவதால் பெற்றோரை கருத்தில் கொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கேலிக்குள்ளான முகம்மது ஷமி.. கை கொடுக்கும் ராகுல் காந்தி..!